Published : 01,Jul 2022 08:52 PM
48 ஆண்டுகளுக்கு முந்தைய தன் பயோ டேட்டாவை பகிர்ந்த பில்கேட்ஸ்! நெட்டிசன்கள் வரவேற்பு!

உலகின் பெரிய பணக்காரர்களில் ஒருவரான பில்கேட்ஸ் தன்னுடைய பயோ டேட்டாவை லிங்க்டு இன் - இல் பதிவிட்டுள்ளார்.
இன்றைய சூழலில், தனித்துவம் பெற்ற சுயவிவரக்குறிப்புகளே திறமையாளார்களை அடையாளம் காட்டி வேலைக்கு அமர்த்துவதற்கு முக்கிய காரணிகளில் ஒன்றாக உள்ளது. அந்தவகையில், உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பில்கேட்ஸ் தான் 48 ஆண்டுகளுக்கு முன் ஹார்வர்டு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போது எழுதிய சுயவிவரக் குறிப்புகள் சமூகவலைத்தளமான லிங்க்டு இன்- இல் பகிர்ந்துள்ளார்.
மேலும், தன்னுடைய ரெஸ்யூமைவிட தற்போது எழுதப்படுபவை மிகவும் நன்றாக இருப்பதாக பில்கேட்ஸ் குறிப்பிட்டுள்ளார். இது சமூகவலைதளங்களில் பரவி வரும் நிலையில், பில்கேட்ஸின் சுயவிவரக் குறிப்புகள் மிகச்சரியாக உள்ளதாக நெட்டிசன்கள் வரவேற்றுள்ளனர்.