Published : 29,Jun 2022 09:10 AM
சிறுமியை காதலிப்பதாக ஏமாற்றி பாலியல் தொல்லை: இளைஞர் போக்சோவில் கைது

திருமணமானதை மறைத்து சிறுமியை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
தண்டையார்பேட்டை பகுதியை சேர்ந்த சுபேர் உசேன் என்பவர் ஆவடி அருகே உள்ள செல்போன் கடை ஒன்றில் வேலை செய்துள்ளார். அப்போது தனக்கு திருமணமானதை மறைத்து அங்கு பணிபுரிந்த சிறுமி ஒருவரை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றியுள்ளார்.
இதனையடுத்து அவர், கடந்த 4 தினங்களுக்கு முன்பு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இதையடுத்து சிறுமியை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சுபேர் உசேனை கைது செய்த திருநின்றவூர் போலீசார், அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததை ஒத்துக்கொண்டார். இதனை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.