Published : 28,Jun 2022 11:13 PM

நடிகை மீனாவின் கணவர் உயிரிழப்பு

Actress-Meena-Husband-no-more

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உயிரிழந்து விட்டார்.

நுரையீரல் மற்றும் இருதயம் ஏற்கெனவே அவருக்கு செயலிழந்துவிட்ட நிலையில், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு சில வாரங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

image

அவருக்கு உறுப்புகள் கிடைக்காமல்போகவே, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய இயலவில்லை. எக்மோ கருவியில் உயிர் வாழ்ந்து வந்த அவர் உடலின் பிற உறுப்புகளும் ஒவ்வொன்றாக செயலிழந்து போக சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

image

2009-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட நடிகை மீனா - வித்யாசாகர் தம்பதிக்கு நைனிகா என்ற மகள் இருக்கிறார். நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்துள்ளது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்