Published : 14,Sep 2017 03:52 PM

நடிகரானார் ஜனகராஜ் மகன்

actor-janagaraj-son

நகைச்சுவை உலகில் கொடிக்கட்டி பறந்தவர் ஜனகராஜ். சில ஆண்டுகளாக அவர் நடிக்காமல் இருந்து வந்தார். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்றும் அவர் அமெரிக்காவில் செட்டிலாகி விட்டதாகவும் பலவேறு விதமாக கருத்துக்கள் நிலவி வந்தன.
 
ஆனால் மிக நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘தாதா 87’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்க இருக்கிறார் ஜனகராஜ். இதில் வில்லனாக சாருஹாசன் 
நடிக்கிறார். இன்னொரு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக ஒருவரை வலைபோட்டு தேடி வந்தது படக் குழு.  இந்த நிலையில் அந்தக் குறிப்பிட்ட கேரக்டருக்கு ஜனகராஜின் மகன் சரியாக இருப்பார் என இயக்குநர் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. ஆரம்பத்தில் முடியாது என மறுத்திருக்கிறார் ஜனகராஜ் மகன். இவர் ஜப்பான் மொழியை மொழிபெயர்க்கும் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்திருக்கிறார். விடாப்பிடியாக இருந்து ஜனகராஜ் மகனை நடிக்க சம்மதிக்க வைத்துவிட்டது தாதா 87 படக் குழு.

இது குறித்து ஜனகராஜ் மகன் நவீனிடம் பேசினோம். “அப்பா கூட சின்ன வயதிலிருந்தே ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு போயிருக்கிறேன். அப்போது எல்லாம் நடிப்பின் மீது ஆர்வமே இருந்ததில்லை. இவர்கள் கட்டாயப்படுத்தியதினால் நடிக்க ஒப்புக் கொண்டேன்” என்றார். முதல் பட அனுபவத்திற்கு பின் இனி தொடர்ந்து நடிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். இதனிடையே இப்படக் குழு இன்று சிவகார்த்திகேயனை சந்தித்துள்ளது. 
 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்