Published : 28,Jun 2022 06:35 PM

’கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றினார்கள்’.. பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை - ஆண் நண்பர் கைது

Nurse-sexually-abused-by-pouring-alcohol--Youth-arrested

செங்கல்பட்டு அருகே செவிலியர் பெண்ணை கட்டாயப்படுத்தி மது குடிக்க வைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக இளைஞர் கைது செய்யப்பட்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த 20 வயது மதிக்கத்தக்க பெண், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர், செங்கல்பட்டு ஆத்தூர் பகுதியைச் சேர்ந்த திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள சரவணன் என்பவருடன் நெருங்கி பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த செவிலியர் பெண், வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் வேலைக்கு விண்ணப்பித்துள்ளார். இதற்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொள்வதற்காக தனது தோழிகளுடன், நள்ளிரவு பேருந்தில் செல்ல திட்டமிட்டுள்ளார். இது குறித்த தகவலையும் சரவணனிடம் பகிர்ந்துள்ளார். சரவணன் தானும் தன்னுடன் வருவதாக கூறியுள்ளார் இருந்தும் செவிலியர் மறுத்துள்ளார்.

image

இதையடுத்து சரவணன் தனது நண்பர்களான கல்லூரி மாணவர் சஞ்சய், வழக்கறிஞர் சூரிய பிரகாஷ் ஆகியோருடன் காரை எடுத்துக் கொண்டு செவிலியர் பெண் சென்ற பேருந்தை பின்தொடர்ந்து சென்ற அவர், காஞ்சிபுரத்தில் வலுக்கட்டயமாக பெண்ணை காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.

இதைத் தொடர்ந்து காரில் அழைத்துச் சென்ற பெண்ணை கட்டாயப்படுத்தி வாயில் மதுவை ஊற்றிய சரவணன் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணை செங்கல்பட்டு ஆத்தூர் அருகே உள்ள முட்புதரில் தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர். போதை தெளிந்து வீட்டிற்கு சென்ற பெண் தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

image

இதனைக் கண்ட பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் பெண்ணிடம் விசாரித்ததில், தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து தன் தாயிடம் கூறியுள்ளார். இதனை அடுத்து உடனடியாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகாரை பெற்றுக் கொண்ட காவல் காவல்துறையினர், முக்கிய குற்றவாளியான சரவணனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் இருவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்