Published : 24,Jun 2022 11:37 AM
நாகை: இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்து - இருவர் பரிதாபமாக உயிரிழப்பு

நாகை அருகே இருசக்கர வாகனங்கள் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரழந்தனர்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரியாஸ். இவர், காரைக்கால் மேடு பகுதியில் உள்ள ரேஷன் கடையில் வேலை பார்த்து வந்தார், இந்நிலையில், இவரும் இவரது நண்பர் முஹம்மத் இக்பால் ஆகிய இருவரும் திருநள்ளாரிலட இருந்து ஏர்வாடிக்கு செல்ல தனித்தனியாக இரண்டு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
அப்போது ஈசனூர் அருகே வந்தபோது இவர்களுக்கு பின்னால் வந்த கார் திடீரென இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், முகமது ரியாஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த முகமது இக்பாலை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு சிகச்சையில் இருந்த முகம்மது இக்பால் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்குப் பதிவு செய்த கீழையூர் போலீசார், விசாரணை செய்து வருகின்ளனர்.