Published : 23,Jun 2022 07:47 AM

மதுரை: வறுமையில் வாடும் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் மீது பாய்ந்த குண்டாஸ்

Kundas-who-attacked-a-woman-who-engaged-women-in-poverty-in-sex-work

வறுமையில் தவிக்கும் இளம் பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பெண் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.

மதுரை கோ.புதூர் மகாலட்சுமி நகரைச் சோந்த தேவராஜ் என்பவரின் மனைவி பிரசன்னா தேவி. இவர் வறுமையில் சிக்கித் தவிக்கும் பெண்களின் ஏழ்மையை பயன்படுத்தி அவர்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

image

இதுகுறித்த கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல்துறையினர் சோதனை நடத்தி பிரசன்னா தேவியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த இளம்பெண்கள் சிலரையும் மீட்டுள்ளனர்.

இந்நிலையில் பிரசன்னா தேவியை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய மதுரை மாநகர காவல் ஆணையர் செந்தில்குமார் உத்தரவிட்டதன் பேரில் காவல்துறையினர் அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

image

இதற்கான ஆணை மதுரை மத்தியச் சிறையில் உள்ள பிரசன்னா தேவியிடம் காவல்துறை சார்பில் வழங்கப்பட்டது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்