Published : 19,Jun 2022 01:02 PM

நீயின்றி நான் எப்படி வாழ்வது? தனிமை பயத்தில் மூத்த தம்பதியர் எடுத்த விபரீத முடிவு

How-can-I-live-without-you-Elderly-couple-commit-suicide-by-drinking-poison-for-fear-of-loneliness

இருவரில் ஒருவர் இறந்துவிட்டால் தனிமையில் வாழ பயம் காரணமாக மூத்த தம்பதியர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டம் சட்டுவந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் வரதராஜலு (82), இவரது மனைவி தனலட்சுமி (71). இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் மகள் வசிக்கும் கீழ்ப்புதுப்பாக்கம் பகுதியில் தங்கியுள்ளனர்.

image

இந்நிலையில், மனைவி தனலட்சுமி கடந்த 10 ஆம் தேதி கீழே விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளித்து கீழ்ப்புதுப்பாக்கம் பகுதி உள்ள மருமகன் ரவி வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

இதையடுத்து 18 ஆம் தேதி தனலட்சுமிக்கு இடுப்பு அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், வரதராஜுலு அவரது மனைவி தனலட்சுமி ஆகிய இருவரும் ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் தனியாக வாழ முடியாது என நினைத்து இருவரும் பேசிக் கொண்டிருந்ததாகவும் நள்ளிரவு வீட்டில் அனைவரும் தூங்கிய பின்பு இருவரும் விஷ மருந்தை சாப்பிட்டு மயங்கிய நிலையில் இருந்துள்ளனர்.

image

இதைத் தொடர்ந்து வீட்டில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு செய்யாறு அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு இருவரையும் பரிசோதனை செய்த மருத்துவர் இருவரும் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து மருமகன் ரவி கொடுத்த புகாரின் பேரில் செய்யாறு காவல் ஆய்வாளர் பாலு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.தனிமையைக் கண்டு பயந்து விஷமருந்தி முதிய தம்பதியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்