Published : 16,Jun 2022 08:25 PM

"3 ஆண்டுகளாக ஏக்கத்துடன் இருந்தேன், ஆனால் இப்போது"-மகிழ்ச்சியை பகிர்ந்த தினேஷ் கார்த்திக்

India-vs-South-Africa-Dinesh-Karthik-elated-after-India-comeback

''உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலும் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதுதான் நான் நாள்தோறும் காணும் கனவு'' என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார் தினேஷ் கார்த்திக்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர் மூலமாக மீண்டும் இந்திய அணிக்கு திரும்பியுள்ளார் தினேஷ் கார்த்திக். அதற்கு முன்பு அவர் 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பைப் போட்டியின் அரையிறுதியில் விளையாடினார். அதன் பிறகு மீண்டும் இந்திய அணிக்கு திரும்புவதற்காக கடினமாக உழைத்த தினேஷ் கார்த்திக் நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற முக்கிய காரணமாக இருந்ததால் மீண்டும் அவர் தேர்வாகியுள்ளார்.

image

இந்நிலையில் அணிக்கு திரும்பியது குறித்து பேசியுள்ள தினேஷ் கார்த்திக், ''மிகவும் மகிழ்ச்சி, மிகவும் பெருமை. அணியின் ஒரு பகுதியாக இருப்பதை  எண்ணி சிறப்பாக உணர்கிறேன்.  ஏனெனில் கடந்த 3 ஆண்டுகளாக வெளியில் இருந்து இதை ஏக்கத்துடன் பார்த்தேன். இந்திய அணியில் நானும் ஒரு வீரராக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் நன்றியுடனும் இருக்கிறேன். அணியில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் மகிழ்ச்சியை தருகிறது.

image

நான் பலமுறை கைவிடப்பட்டேன். மீண்டும் இந்திய அணிக்கு வர வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். உள்நாட்டு கிரிக்கெட், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினாலும் இந்திய அணியில் விளையாட வேண்டும் என்பதுதான் நான் நாள்தோறும் காணும் கனவு. எனது விளையாட்டை மேம்படுத்துவதற்கான வழிகளை நான் எப்போதும் கண்டுபிடித்துள்ளேன். அந்த பயணத்தில் எனக்கு உதவுவதற்காக என்னைச் சுற்றி எப்போதும் நண்பர்கள் இருக்கின்றனர். இது கிட்டத்தட்ட ஒன்றரை தசாப்த போராட்டம். அதனால் நிறைய விஷயங்கள் மாறியுள்ளன. 15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட இப்போது கிரிக்கெட் நிறையவே மாறிவிட்டது என்று நினைக்கிறேன். குறிப்பாக டி20 கிரிக்கெட்டில் நான் அதில் ஒரு பகுதியாக இருந்தேன், அது வளர்ந்து வருவதைக் கண்டேன்" என்று  கூறினார்.

இதையும் படிக்கலாம்: ஹிட் மேன் ரிட்டர்ன்ஸ்' களத்தில் இறங்க தயாராக இருக்கும் ரோகித் சர்மா!

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்