Published : 01,Jun 2022 01:50 PM
சேலம்: யூடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இளைஞர்கள் கைது
சேலத்தில் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்த இரண்டு பேரிடம் கியூ பிரிவு காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓமலூர் காவல்துறையினர் வாகன சோதனையின் போது, துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்களை கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் இரண்டு பேரும் யுடியூப் பார்த்து துப்பாக்கி தயாரித்தது தெரிய வந்துள்ளது.
அவர்கள் தங்கியிருந்த வீட்டை சோதனை செய்த போது, துப்பாக்கி தயாரிப்பதற்கான அனைத்து உபகரணங்களையும் அந்த இளைஞர்கள் வைத்துள்ளதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர். அதைத்தொடர்ந்து காவல்துறையினர் கைது செய்த இளைஞர்களை இரண்டு நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே கியூ பிரிவு காவல்துறையினரும் தனியாக விசாரணையை தொடங்கியுள்ளனர்.
இந்த விசாரணையில் இருவரும் எதற்காக துப்பாக்கி தயாரிக்க திட்டமிட்டனர், விற்பனை செய்யவா, ஏதாவது சட்டவிரோத அமைப்புகளுடன் தொடர்பில் உள்ளனரா, துப்பாக்கி தயாரிக்க இவர்களுக்கு உதவிகள் செய்தது யார், நிதி உதவிகள் செய்தது யார், இவர்களுக்கு ஏதாவது தீவிரவாத அமைப்பு துவங்க உள்ளனரா என்பது உட்பட 250-க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட இருப்பதாக போலீசார் வட்டாரத்தில் கூறப்படுகிறது.