[X] Close

ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!

விளையாட்டு,IPL திருவிழா 2022

Is-ee-sala-cup-possible--Rajasthan-won-the-toss-and-elected-to-bowl-aginst-RCB

ஐ.பி.எல் போட்டியின் 2-வது தகுதிச்சுற்றுப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஐபிஎல் 2022 சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. மகாராஷ்டிராவில் நடைபெற்ற 70 லீக் ஆட்டங்களில், குஜராத், ராஜஸ்தான், லக்னோ மற்றும் பெங்களூரு அணிகள் பிளே ஆஃப் போட்டிக்கு தகுதி பெற்றன. இதில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில், கடந்த 24-ம் தேதி நடைபெற்ற முதல் தகுதிச்சுற்றுப் போட்டியில், முன்னாள் சாம்பியான ராஜஸ்தான் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தேர்வானது. இதையடுத்து, நேற்று முன்தினம் நடைபெற்ற எலிமினேட்டர் போட்டியில் மற்றொரு அறிமுக அணியான லக்னோவை 14 ரன்களில் வீழ்த்தி பெங்களூரு அணி 2வது தகுதிச்சுற்றுப் போட்டிக்கு தகுதிபெற்றது.

RR vs RCB मैच में इन 3 खिलाड़ियों पर होंगी सबकी नजरें


Advertisement

இதனைத் தொடர்ந்து குவாலிஃபயர் 2 போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி, டூ பிளசிஸ் தலைமையிலான பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது. ராஜஸ்தான் அணியில் பட்லர், சஞ்சு சாம்சன், படிக்கல், ஹேட்மயர், ஜெய்ஷ்வால் ஆகியோர் ரன்கள் அடித்தாலே ஆர்சிபிக்கு கடும் நெருக்கடி தர முடியும். பந்துவீச்சில் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியில் ராஜஸ்தான் பந்துவீச்சு படுமோசமாக இருந்தது. கடந்த ஆட்டத்தில் செய்த தவறை திருத்தி கொண்டால் மட்டுமே வெற்றி பெற முடியும். பிரசித் கிருஷ்ணா, சாஹல் ஆகியோர் விக்கெட்டுகளை எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

IPL 2022, RCB vs RR: Check out pitch report, dream 11, probable playing XI  of both sides

மறுபக்கம் ஆர்சிபி அணியை பொறுத்தவரை விராட் கோலி, தினேஷ் கார்த்திக், டுபிளஸிஸ், மேக்ஸ்வெல் என அதிரடி பேட்டிங் வரிசையுடன் மிரட்டலாக காட்சி அளிக்கிறது. சீனியர்கள் சொதப்பினாலும் ரஜத் படிதார் போன்ற ஜூனியர்கள் அதிரடியாக விளையாடி கை கொடுக்கின்றனர். பந்துவீச்சிலும் ஹசரங்கா, ஹர்சல் பட்டேல், ஹேசல்வுட் ஆகியோர் எதிரணிக்கு சிம்ம சொப்பனமாக விளங்குவார்கள்.

IPL 2022 Qualifier 2: RR vs RCB Match Prediction - Who will win today's IPL  match?

இரு அணிகளும் இந்த சீசனில் இரண்டு முறை நேருக்கு நேர் மோதிவுள்ளன. இதில், ஒருமுறை 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணியும், மற்றொரு முறை 29 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணியும் வெற்றிபெற்றுள்ளது. இதனால் சம பலத்தில் உள்ள இரு அணிகளும் இன்று நடைபெறும் போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்ட உள்ளனர். இதில் வெற்றி பெறும் அணி, குஜராத்துடன் இறுதி போட்டியில் மோத உள்ளதால், இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. டாஸ் வென்ற ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பவுலிங்கை தேர்வு செய்தார்.

TATA IPL 2022 RR vs RCB dream11 prediction tips by experts for match 73

இரு அணிகளின் ஆடும் லெவன்:

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: விராட் கோலி, ஃபாஃப் டு பிளெசிஸ், ரஜத் படிதார், கிளென் மேக்ஸ்வெல், மஹிபால் லோம்ரோர், தினேஷ் கார்த்திக் (வ), ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்க, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ்.

ராஜஸ்தான் ராயல்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யஸ்வேந்திர சாஹல்.

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close