சங்கராபுரம் அருகே ஜேசிபி ஆப்ரேட்டரை அடித்துக் கொலை செய்த குற்றவாளிகளை கைது செய்யக்கோரி பிரேதத்தை சாலையில் வைத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே வடசிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ராஜா என்பவரின் மகன் தீபன். இவர், அதே கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் அறிவழகனிடம் ஜேசிபி ஆபரேட்டராக பணி செய்து வந்தார். இந்நிலையில், இவர், வேலைக்கு செல்லாததாலும், அவரிடம் வாங்கிய முன்பணத்தை செலுத்தாததாலும் அறிவழகனின் உறவினர்கள் தீபனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் படுகாயமடைந்த தீபன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தீபனின் உறவினர்கள் சடலத்துடன் சங்கராபுரம் மும்முனை சந்திப்பு பகுதியில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் கள்ளக்குறிச்சி - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒருமணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இது குறித்து தகவறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருக்கோயிலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் பழனி, தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Loading More post
"ஒரு சிலரின் அரசியல் லாபத்துக்காக அப்பாவி தொண்டர்களை பலியாக்குவதா? " - சசிகலா காட்டம்
'தமிழ் ராக்கர்ஸ்' வெப் சீரிஸ்.. மீண்டும் சினிமாவில் கால்பதிக்கும் AVM நிறுவனம்!
மைதானத்தில் விராட் கோலி - பேர்ஸ்டோ இடையே கடும் வாக்குவாதம்! வீடியோ வைரல்!
“எடப்பாடி பழனிசாமிக்கு சமூகநீதி என்றால் என்னவென்று தெரியுமா?” - சீமான் காட்டம்
குடியரசுத் தலைவர் தேர்தல் - திரெளபதி முர்முவின் பக்கம் சாயும் மம்தா பானர்ஜி! பின்னணி என்ன?
தெற்காசியாவை உலுக்கும் நிலநடுக்கங்கள்! நேற்று ஆப்கனில்! இன்று ஈரானில்! என்ன காரணம்?
திகிலே இல்லாமல் ஒரு திகில் படம்!- ‘டி பிளாக்’ திரைப்பட விமர்சனம்...!
‘போஸ்டரை வெளியிட்டால் படத்தை ரிலீஸ் செய்வோம்’ - போர்குடி பட ரிலீஸில் என்னதான் பிரச்னை?
தமிழில் ஒரு கே.ஜி.எஃப்?.. தனுஷ் படத்தின் மாஸ் அப்டேட் - யார் அந்த ‘கேப்டன் மில்லர்’ ?