தேசிய அளவில் நதிகளை இணைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இணைப்புக்கு தமிழக அரசு ஆதரவு அளிக்கிறது என முதல்வர் பழனிசாமி கூறினார்.
சென்னை-நந்தனத்தில் நதிகளை மீட்போம் பேரணி கூட்டம் நடந்தது. இந்த விழிப்புணர்வு கூட்டத்திற்கு நதிகளை மீட்போம், பாரதம் காப்போம் இயக்கம் ஏற்பாடு செய்திருந்தது. கன்னியாகுமரி முதல் இமயமலை வரை நதிகளை இணைக்க வலியுறுத்தி இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு ,அப்பல்லோ குழும தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலர் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய முதல்வர் பழனிசாமி, "நதிகளை மீட்பது குறித்து தேசிய இயக்கம் செயல்பட்டு வருகிறது. இவ்விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. மரங்கள் நடுவதில் ஜெயலலிதா மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். நீர் நிலைகளை மீட்டெடுக்கும் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. தேசிய அளவில் நதிகளை இணைக்க மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. நதிகளை இணைக்க மத்திய அரசு புதிய சட்டத்தை கொண்டு வரவேண்டும்" என அவர் தெரிவித்தார்.
Loading More post
தெருக்களில் ஜாதி பெயர்களை நீக்கும் பணி தீவிரம் - சென்னை மாநகராட்சி அதிரடி
விடியவிடிய செஸ் போட்டி: காலையில் +1 தேர்வு - கலக்கும் பிரக்ஞானந்தா!
”ஆன்லைன் ரம்மி விளையாடினால் தற்கொலை செய்து கொள்ளும் நிலை” - தமிழக டிஜிபி எச்சரிக்கை
தடுமாற்றம்.. தடுமாற்றம்.. தடுமாற்றம்.. ரிப்பேர் ஆனதா ரன் மெஷின்? - கோலியும், 2022 சீசனும்!
424 விஜபிக்களுக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு வாபஸ் - பஞ்சாப் அரசு அதிரடி
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி