Published : 10,May 2022 01:34 PM

ஓசூர்: சிறுமிக்கு பாலியல் தொல்லை; கேபிள் ஆபரேட்டர் போக்சோவில் கைது

Hosur--Sexual-harassment-of-a-girl-Cable-operator-arrested-in-Pokcho

ஓசூரில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பார்வதி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷான் பாஷா (42). கேபிள் ஆபரேட்டரான இவர், வசந்த் நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் கேபிள் வயரை சரிசெய்ய சென்றுள்ளார். அப்போது அந்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில், சிறுமி மட்டும் இருந்துள்ளார். இதை அறிந்த ஷான் பாஷா, சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

image

அப்போது, அவரிடமிருந்து தப்பி வெளியே வந்த சிறுமி, இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் ஓசூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஷான் பாஷாவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்