Published : 04,Feb 2017 02:20 AM

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

Reserve-Bank-of-India-to-soon-put-new-Rs-100-banknotes

விரைவில் புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

மகாத்மா காந்தி வரிசையில், ஆர் என்ற ஆங்கில எழுத்தின் தொடக்கத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் என்றும், அவற்றில் ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேலின் கையெழுத்து இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய ரூபாய் நோட்டில் 2017 என்ற ஆண்டு இடம்பெறும் என்றும், ஏற்கனவே புழக்கத்தில் உள்ள 100 ரூபாய் நோட்டுகள் தொடர்ந்து செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்