Published : 08,May 2022 08:29 PM
விபத்தை தவிர்க்க இருசக்கர வாகனங்கள் மீது மோதிய கர்நாடக அரசு பேருந்து - பதைபதைக்கும் வீடியோ

கர்நாடகாவில் விபத்தை தவிர்க்க சாலையோரம் நின்ற 2 இருசக்கர வாகனங்கள் மீது அரசு பேருந்து மோதி விபத்து ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெல்காம் அருகே சங்கேஸ்வரம் பெல்காம் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது வேகமாக வந்த கர்நாடக அரசு பேருந்து, சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனத்தின மீது மோதாமல் இருக்க முயன்றுள்ளது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து சாலையோரம் நின்றிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் மூவர் பலத்த காயம் அடைந்த நிலையில் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் காயமடைந்தவர்களை மீட்டு பெல்காம் மாவட்ட மருத்துவமனையில் சேர்த்தனர்.
இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டனர். போலீசார் விசாரணையில் அரசு பேருந்து மோதி காயமடைந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த சத்ருதீன், மாருதி கோட்டா, ரமா வந்தமுரி என்று தெரியவந்தது.