Published : 05,May 2022 08:47 PM
சிவகார்த்திகேயனின் ‘டான்‘ பட ட்ரெய்லர் எப்போது? - வெளியான அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டான்’ திரைப்படத்தின் ட்ரெயிலர் நாளை வெளியிடப்படுவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘டாக்டர்’ திரைப்படத்திற்குப் பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டான்’. அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் ஜோடியாக பிரியங்கா மோகன் இரண்டாவது முறையாக இணைந்து நடித்துள்ளார். நடிகர் எஸ்.ஜே. சூர்யா, சமுத்திரக்கனி, காளி வெங்கட், முனீஷ்காந்த், பாலசரவணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கல்லூரி கதைக்களத்தில் முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தப்படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சூரி கல்லூரி மாணவர்களாக நடித்துள்ளனர்.
சிவகார்த்திகேயனுடன் இணைந்து லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் வரும் 13-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. நாளை சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள பட வெளியீட்டிற்கு முந்தைய ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில், படத்தின் ட்ரெயிலர் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் அனைவரும் பங்கேற்பார்கள் என்றும் படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. உதயிநிதியின் ரெட் ஜெயண்ட் இந்தப் படத்தை வெளியிடுகிறது.