Published : 21,Apr 2022 07:06 PM

வாழ்வா? சாவா? மோதல்! மும்பைக்கு எதிராக டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்தது சென்னை!

Chennai-super-kings-won-the-toss-and-elected-to-bowl-against-Mumbai-indians

இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை- மும்பை இடையிலான வாழ்வா? சாவா? மோதலில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்.

ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இடையேயான போட்டி இன்று நடைபெறுகிறது. நடப்பு தொடரில் ரவீந்திர ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இதுவரை நடைபெற்றுள்ள 6 போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அதே வேளையில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியோ, பங்கேற்ற 6 போட்டிகளில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. மும்பை அணி இன்றைய ஆட்டத்தில் தோற்றால் தொடரிலிருந்து வெளியேறிவிடும், சென்னை அணி தோற்றால் இனி நடைபெறும் அனைத்து போட்டிகளுமே வாழ்வா சாவா என்ற நிலை தான்.

சென்னை அணியில் ருதுராஜ் கெய்க்வாட் ‘ஃ பார்மிற்கு’ திரும்பியிருப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. உத்தப்பா, அம்பதி ராயுடு, மொயீன் அலீ ஆகியோர் பழைய ஃபார்ம்க்கு வந்தால் மட்டுமே சிஎஸ்கே தப்பிக்க முடியும். அதிக ரன் எடுத்த சென்னை அணி வீரர்களில் முதலிடத்தில் உள்ள ஷிவம் துபே சீரான பேட்டிங்கை தர வேண்டும். தொடர்ந்து சொதப்பி வரும் தோனி, ஜடேஜா இருவரும் இந்த போட்டியில் ஃபினிஷராக அணிக்கு வெற்றி பெற்றுத் தருவர் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். சென்னை அணிக்கு விக்கெட்டை வீழ்த்தும் வேகப்பந்துவீச்சாளர் என்று யாரும் இல்லை. பவுலிங்கில் டுவைன் பிராவோ, தீக்சனா மட்டுமே ஆறுதல் தருகின்றனர்.

இதையும் படிக்கலாமே:ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய மற்றொரு சிஎஸ்கே வீரர் - கண்முன் கொண்டு வரும் 2020 சம்பவம்

TATA IPL Chennai Super Kings Team Profile 2022: Check here the team information about CSK with their players, profile, prices, stats, records.

மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷான் ஆகியோரின் ஃபார்ம் கவலை தருகிறது. இவர்கள் மீண்டால் அந்த அணியின் பாதி பிரச்சினை முடிந்துவிடும். சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, பிரெவிஸ், பொலார்ட் இணைந்து அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும். மும்பை அணியில் பும்ராவை தவிர வேறு எந்த வேகப்பந்துவீச்சாளரும் அணியை காப்பாற்றவில்லை. மும்பை அணியில் ஒட்டுமொத்த வீரர்களும் எழுச்சி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தொடர் தோல்விகளை சந்தித்து வரும் இரு அணிகள் இடையேயான இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ஜடேஜா பவுலிங்கை தேர்வு செய்தார்.

IPL 2022, MI Predicted XI vs LSG: Will Mumbai Indians Give Tim David A Chance? | Cricket News

இரு அணிகளின் ஆடும் லெவன்:

சென்னை சூப்பர் கிங்ஸ்: ராபின் உத்தப்பா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி, அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா (கேப்டன்), எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), டுவைன் பிரிட்டோரியஸ், டுவைன் பிராவோ, மிட்செல் சான்ட்னர், மகேஷ் தீக்ஷனா, முகேஷ் சவுத்ரி

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), டெவால்ட் ப்ரீவிஸ், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், கீரன் பொல்லார்ட், ஃபேபியன் ஆலன், ஜெய்தேவ் உனட்கட், ஹிருத்திக் ஷோக்கீன், ஜஸ்பிரிட் பும்ரா,ரிலே மெரிடித்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்