Published : 17,Apr 2022 03:44 PM
"நான் பார்த்ததிலேயே சிறந்த இளம் வீரர்" - மைக்கேல் வாகன் பாராட்டிய மும்பை வீரர் யார்?

"நான் பார்த்ததிலேயே சிறந்த இளம் வீரர்" என்று மும்பை அணியின் இளம் வீரர் டெவால்ட் ப்ரெவிஸை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் பாராட்டியுள்ளார்.
நடந்துகொண்டிருக்கும் ஐபிஎல் 2022 சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் இளம் வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் சிறப்பான விளையாட்டால் தொடர்ந்து கவனம் பெற்று வருகிறார். ஒவ்வொரு முறையும் அவர் மும்பை அணிக்காக பேட் செய்யும்போது, 18 வயதான அவரின் திறனைக் கண்டு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுநர்கள் வியப்படைகின்றனர். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு எதிரான ஆட்டத்தில், ப்ரீவிஸ் 13 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்து அசத்தினார்.
Dewald Brevis !! Best young player I have seen … #IPl2022
— Michael Vaughan (@MichaelVaughan) April 16, 2022
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் மைக்கேல் வாகன் டெவால்ட் ப்ரெவிஸை வெகுவாகப் பாராட்டினார். “டெவால்ட் ப்ரெவிஸ்! நான் பார்த்ததிலேயே சிறந்த இளம் வீரர்” என்று குறிப்பிட்டு ட்வீட் செய்தார் மைக்கேல் வாகன். ஆஸ்திரேலியாவின் முன்னாள் பேட்டர் மார்க் வாவும் ப்ரீவிஸின் திறனைப் பாராட்டி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். “ஆஹா நம்பமுடியாத பந்து! அட்டகாசமான ஸ்டிரைக்கிங்! ஆனால் கிரீஸில் இருப்பது ஒரு இளம் பேட்ஸ்மேன்!” என்று குறிப்பிட்டுள்ளார் மார்க் வாஹ்.