கானா பாடல்களை விட மெலோடி பாடல்களே சிறந்தது என இசையமைப்பாளர் தேவா தெரிவித்துள்ளார்.
கருணாஸ் நடித்துள்ள ’ஆதார்’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இதையடுத்து தன்னுடைய மகன் இசை வெளியீட்டு விழாவில் பிரபல இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டார். அதில் பேசிய அவர், ஸ்ரீகாந்த் தேவா மெலோடி பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அந்த வகையிலான பாடல்களை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். கானா பாடல்கள் மற்றும் குத்து பாடல்களை விட மெலோடி சிறந்தது எனவும் தெரிவித்தார்.
நான் 50 முதல் 60 வரையிலான கானா பாடல்களை மட்டுமே இசையமைத்தேன். அதைவிட அதிகமாக மெலோடி பாடல்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆனால் என்னை கானா புகழ் தேவா எனவே அழைக்கிறார்கள் என வருத்தம் தெரிவித்தார். இதனால் ஸ்ரீகாந்த் தேவா மெலோடி பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். அதுவே சிறந்தது என கேட்டுக்கொண்டார்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai