Published : 30,Mar 2022 09:29 PM

கிரீஸூக்கு வருவதும் போவதுமாக இருந்த கொல்கத்தா வீரர்கள் - பந்துவீச்சில் மிரட்டிய ஆர்சிபி

royal-challengers-bangalore-team-bowlers-well-controlled-kkr-batsmen-in-ipl-league-match

நடப்பு ஐபிஎல் சீசனின் ஆறாவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடின. டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்துவீசியது. 

image

கொல்கத்தா அணிக்காக ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் இன்னிங்ஸை தொடங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுக்க தவறினர். கொல்கத்தா பேட்ஸ்மேன்கள் இந்த போட்டியில் கிரீஸூக்கு வருவதும். வந்த வேகத்தில் பெவிலியன் திரும்புவதிலும் பிஸியாக இருந்தார்கள். முதல் பத்து ஓவர்களில் அந்த அணி 76 ரன்கள் எடுப்பதற்குள் ஆறு பேட்ஸ்மேன்களை இழந்து விட்டது. 

தொடர்ந்து விக்கெட்டை இழந்து கொண்டே இருந்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ரஸ்ஸல் 25 ரன்கள் எடுத்திருந்தார். 13.5 ஓவர்களில் ரெகுலர் பேட்ஸ்மேன்களின் விக்கெட்டை கொல்கத்தா இழந்திருந்தது. அதன் பிறகு பவுலர்கள் மட்டுமே அந்த அணிக்காக பேட் செய்தார்கள். 

image

18.5 ஓவர்கள் முடிவில் அந்த அணி 128 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நடப்பு சீசனில் முதல்முறையாக அனைத்து விக்கெட்டுகளையும் 20 ஓவர் முடிவதற்குள் இழந்த அணியாக உள்ளது கொல்கத்தா. “நாங்களும் முதலில் பவுல் செய்யவே விரும்பினோம். பனிப்பொழிவு தான் அதற்கு காரணம். பவுலர்கள் பேட்ஸ்மேன்களின் பணியை சுலபமாக்கினார்கள். இந்த போட்டி எங்களுக்கு ஒரு பேட்டிங் பரீட்சை. என்ன ஸ்கோர் வருகிறது என்பதை பார்ப்போம்” என டாஸை இழந்த போது கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் சொல்லியது. 

பெங்களூர் அணிக்காக ஹசரங்கா 4 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். ஆகாஷ் தீப் - 3, ஹர்ஷல் படேல் - 2, சிராஜ் - 1 விக்கெட் வீழ்த்தி இருந்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்