Published : 30,Mar 2022 04:48 PM
ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு 12 லட்ச ரூபாய் அபராதம் விதிப்பு: ஏன் தெரியுமா?

நடப்பு ஐபிஎல் சீசனின் ஐந்தாவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடின. இதில் ஹைதராபாத் அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் ஆட்டத்தை இழந்தது. அந்த அணி டாஸ் வென்று முதலில் பந்து வீசி இருந்தது.
இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் குறிப்பிட்ட கால நேரத்திற்குள் 20 ஓவர்களையும் வீசி முடிக்காத காரணத்தால் ஹைதராபாத் அணியின் கேப்டன் வில்லியம்சனுக்கு 12 லட்ச ரூபாய் பெனால்டி (அபராதம்) விதிக்கப்பட்டது. ஸ்லோ-ஓவர் ரேட் காரணமாக இந்த சீசனில் முன்னதாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் 12 லட்ச ரூபாய் அபராதம் செலுத்தியிருந்தார்.
“நாங்கள் ஆட்டத்தை அருமையாக தொடங்கியிருந்தோம். அதன் மூலம் எங்களுக்கு வாய்ப்புகள் கிடைத்தது. இருந்தாலும் இந்த ஆட்டம் எங்கள் கட்டுப்பாட்டில் செல்லவில்லை. ராஜஸ்தான் அருமையாக ஆடி இருந்தார்கள். ஒரு அணியாக நாங்கள் மேலும் சில விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியுள்ளது” என ஆட்டத்திற்கு பிறகு சொல்லியிருந்தார் வில்லியம்சன்.