துபாய் சென்று வந்த விவகாரத்தில், கோட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு என, முதல்வரை மக்கள் கேள்வி கேட்கிறார்கள் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் உசிலம்பட்டியில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே எழுமலை மற்றும் செல்லம்பட்டி பகுதிகளில், வெளியிலின் தாக்கத்தை போக்கும் வகையில், நீர்மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ அய்யப்பன் இணைந்து துவக்கி வைத்தனர். பின்னர், பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி துபாய் சென்று, 4 ஆயிரம் கோடி அளவில் முதலீட்டை பெற்று வந்த போது ஏளனம் செய்த திமுக, தற்போது துபாய் சென்று பல்வேறு குளறுபடிகளை செய்துவிட்டு வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
துபாய் அரசு சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதில் துவங்கி, செம்மொழி பாடல் ஒழிக்க வைத்தது வரை நாடகமாகவே நடந்துள்ளது, கோட் சூட் போட்ட அண்ணாச்சி முதலீடு என்னாச்சு என முதல்வரை பார்த்து, மக்கள் கேள்வி கேட்கிறார்கள் என அவர் கூறியுள்ளார். மேலும் 5 ஆயிரம் கோடி வரை முதலீட்டை பெற்று வந்துள்ளதாக கூறும் திமுக அரசு மீதும், அவர்கள் குறிப்பிட்டுள்ள கட்டிட பணிகளுக்கான முதலீட்டின் மீதும், பல்வேறு அய்யப்பாட்டை எழுப்பியிருக்கிறது என ஆர்.பி.உதயக்குமார் பேசியுள்ளார்.
திமுக அரசு முன்னாள் அமைச்சர்களை எல்லாம் அதிகார துஷ்பிரயோகத்தாலும், அதிகார நெருக்கடியாலும், சர்வாதிகாரத்தினாலும், அடக்குமுறையாலும் அகதிகளாக நடத்தி வருகிறது. இருந்த போதும் அதிமுக வின் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், இன்றைக்கும் களத்தில் முதல் ஆளாக நின்று மக்கள் பணிகளை செய்து வருகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.
Loading More post
பீகார் மருந்து ஆய்வாளரிடம் கோடிக்கணக்கிலான பணம் பறிமுதல் - லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை
எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.94.23 லட்சம் ரொக்கம் பறிமுதல் - தீவிர விசாரணை
ரோகித் சர்மாவுக்கு கொரோனா பாதிப்பு - இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு!
44வது செஸ் ஒலிம்பியாட் தொடரிலிருந்து விலகியது சீனா! இந்தியாவுக்கு பாதிப்பா?
முன்னெச்சரிக்கையாக தடுக்கப்பட்ட கொலை சம்பவம்! ஆயுதங்களுடன் 10 சிறார் உட்பட 14 பேர் கைது
‘பஞ்சாங்கம் மூலம் துல்லியமா சேட்லைட் விட்டாங்க’ - சோஷியல் மீடியாவை அலறவிட்ட மாதவன்!
10 மாதங்கள் ஆற்றில் கிடந்த பின்னும் வேலை செய்த ஐபோன்.. இங்கிலாந்தில் நிகழ்ந்த சுவாரஸ்யம்
டிஸ்மிஸ் ஆகப்போகிறார்களா அதிருப்தி எம்.எல்.ஏ.கள்? மகா. அரசியல்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 33: 'எச்சில் இலை எடுக்குறேனு என்னைக்கும் வருத்தப்பட்டதில்ல'