‘பீஸ்ட்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழுடன் படத்தின் வெளியீட்டு தேதியும் வெளியான நிலையில், ஒரே நேரத்தில் ரசிகர்கள் அதிகம்பேர் தேடியதால், சென்சார் வெப்சைட் திக்குமுக்காடிப்போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் ‘மாஸ்டர்’ திரைப்படத்திற்கு நடித்துள்ள படம் ‘பீஸ்ட்’. இந்தப் படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, டாம் சாக்கோ, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார்.
சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைத்துள்ளார். அனிருத் இசையில் ஏற்கனவே வெளியான அரபிக்குத்து மற்றும் ஜாலியோ ஜிம்கானா பாடல்கள் யூ-டியூப்பில் சாதனை படைத்துள்ளன. விரைவில் இந்தப் படத்தின் டீசர் மற்றும் ட்ரெயிலர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ‘பீஸ்ட்’ திரைப்படத்திற்கு தணிக்கைத்துறை யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளது. மேலும், 2 மணி நேரம், 35 நிமிடங்கள் படத்தின் ரன்னிங் நேரம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படம் வருகிற ஏப்ரல் 13-ம் தேதி வெளியாக உள்ளதாக சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#BeastFromApril13@actorvijay @Nelsondilpkumar @anirudhofficial @hegdepooja @selvaraghavan @manojdft @Nirmalcuts @anbariv #Beast pic.twitter.com/htH6dTPX2q — Sun Pictures (@sunpictures) March 22, 2022
இதனிடையே, சென்சார் சான்றிதழ் வெளியான நேரத்தில், அதிகளவிலான ரசிகர்கள் ஒரே நேரத்தில் சென்சார் போர்டு இணையதளத்தில் தேடியதால், சிறிதுநேரம் அந்த இணையதளம் டவுன் ஆனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
Loading More post
எளியோரின் வலிமைக் கதைகள் 35- ‘இது சாப்பாடு போடும் சாமானியர்களின் கதை’
சரவணா ஸ்டோர்ஸின் ரூ.235 கோடி சொத்துகள் முடக்கம்
'மின் இணைப்பை துண்டித்து விடுவோம்' - புதுவித சைபர் மோசடி.. போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
ஆரணி: சிக்கன் பிரியாணியில் கிடந்த கரப்பான் பூச்சி; அதிர்ச்சியடைந்த தம்பதியர்
தோனி எடுத்த அந்த துணிச்சலான 5 முடிவுகள்
“நான் நிரபராதி என்றால் குற்றவாளி யார்?” காலத்தின் முன் விடையில்லா நம்பி நாராயணனின் கேள்வி!
“எங்களை கழட்டிவிட்டார்”.. தோனியை காட்டமாக விமர்சித்த இந்திய கிரிக்கெட்டின் 5 ஜாம்பவான்கள்!
"ராக்கெட்ரி பார்க்க போறீங்களா?” - அப்ப இந்த 4 வரலாற்று பின்னணியை தெரிஞ்சுட்டு போங்க!
புதிய உச்சத்தில் பாம்பு கடியால் ஏற்படும் உயிரிழப்புகள்.. தமிழகத்தின் நிலைஎன்ன? முழுநிலவரம்