Published : 21,Mar 2022 12:29 PM
ஆயுதங்களுக்காக ரஷ்யாவை நம்பியுள்ள இந்தியா: அதிபர் புதின் - பிரதமர் மோடி கூட்டணியா?

உக்ரைன் மீது படையெடுத்து யுத்தம் செய்து வருகிறது ரஷ்யா. இந்த யுத்தம் நான்காவது வாரத்தை எட்டியுள்ளது. அமெரிக்கா உட்பட பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவுக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக நடவடிக்கை எடுத்துள்ளன. இருந்தும் இந்தியா இந்த விவகாரத்தில் எதுவும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறது.
இந்நிலையில் இந்தியாவின் இந்த மௌனத்திற்கு காரணம் ஆயுத தேவைக்காக ரஷ்யாவை நம்பியிருப்பது தான் என பகிரங்கமாக சொல்லப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா மாதிரியான நாடுகள் ரஷ்யா விவகாரத்தில் இந்தியாவுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது.
சீனாவின் படை பலத்தை சமாளிக்க இந்தியாவுக்கு ரஷ்யாவின் ஆயுதங்கள் அவசிய தேவையாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது. அதே போல அடிக்கடி வாலை ஆட்டும் பாகிஸ்தானின் ஆட்டத்தை அடக்கவும் இந்தியாவுக்கு ஆயுதங்கள் தேவைப்படுகிறது. மேலும் ரஷ்யா நாட்டு ஆயுதங்களை தவிர்த்து மற்ற நாடுகள் சூழலை கருத்தில் கொண்டு ஆயுதங்களின் விலை அதிகமாக சொல்வதாகவும். அது இந்திய அரசுக்கு கட்டுபடி ஆகவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
இந்திய பாதுகாப்பு படையினருக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் நாடுகள்?
>ரஷ்யா 46%
>பிரான்ஸ் 27%
>அமெரிக்கா 12%
>இதர நாடுகள் 15%
இந்தியா பயன்படுத்தி வரும் பெரும்பாலான ஆயுதங்கள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்களில் சுமார் 50% அல்லது அதற்கு மேலாக ரஷ்யாவின் பங்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.