ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள பயணி பாடல் வீடியோவை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு நடிகர் தனுஷ் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். இவர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், கதையாசிரியர், இயக்குநர் என திரையுலகின் பல துறைகளிலும் சிறந்து விளங்கி வருகிறார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வரும் தனுஷ் தற்போது ஹாலிவுட்டில் தி கிரே மேன் படத்திலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நான்கு மொழிகளில் மியூசிக் வீடியோ ஒன்றை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கி வந்தார். அந்த மியூசிக் வீடியோ இன்று வெளியாகியுள்ளது.
இதையடுத்து தென்னிந்தியாவைச் சேர்ந்த மோகன்லால், சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன், மகேஷ் பாபு உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அதனை பகிர்ந்து, வாழ்த்துக்களை தெரிவித்தநிலையில், தனுஷும் அந்த ட்வீட்டை பகிர்ந்துள்ளார். அதில், ‘உங்களுடைய பயணி மியூசிக் வீடியோவிற்கு எனது வாழ்த்துக்கள் தோழி. கடவுள் ஆசீர்வதிக்கட்டும்” என்று தெரிவித்துள்ளார்.
Congrats my friend @ash_r_dhanush on your music video #payani https://t.co/G8HHRKPzfr God bless — Dhanush (@dhanushkraja) March 17, 2022
நடிகர் தனுஷ் நடித்த ‘மாறன்’ திரைப்படம் டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் கடந்த 20-ம் தேதி வெளியாகியது. பட வெளியீடு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட தனுஷ், “இனி மாறன் திரைப்படம் உங்களுடையது, ஓம் நமச்சிவாய.” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட்டை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் லைக்ஸ் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய அனைத்து வீடியோக்களுமே Video Unavailable this Video is Private என்று வந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
Loading More post
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நடிகர் பூ “ராமு” காலமானார்!
மத்திய அரசின் திட்டம் என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி - குற்றவாளி சிக்கியதன் பின்னணி!
வெளிநாட்டு கடன்களை செலுத்த இயலாமல் “திவால்” ஆகும் ரஷ்யா? காரணம் இதுதானா?
வரிகளை குறைக்க இப்படிலாமா செய்வாங்க? - பிரபல நிறுவனங்களின் தில்லாலங்கடி!
ஆன்லைன் விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி?.. சண்டீகரில் நாளை தொடங்குகிறது கூட்டம்!
25 ஆண்டுகால சூர்யவம்சம்.. நந்தினிக்கள் ஏன் கொண்டாட வேண்டிய தேவதைகள்? #25YearsOfSuryaVamsam
பணமா? பாசமா?.. வாழ்க்கை தத்துவமும் ரஜினி படங்களின் கேரக்டர்களும்! - ஓர் உளவியல் பார்வை
உத்தவ் தாக்கரேவுக்கு செக் வைத்த உச்சநீதிமன்றம்! டாப் 5 லேட்டஸ்ட் தகவல்கள் இதோ!
அண்ணாமலையில் பிரபுதேவாவுக்கு என்ன வேலை? #30YearsOfAnnamalai