[X] Close

சேலத்தில் போலி மருத்துவரை கையும் களவுமாக பிடித்த ஆட்சியர்

favorite-collector-of-the-pseudologist-in-Salem

சேலத்தில் டெங்கு தடுப்பு நடவடிக்கையின் திடீர் ஆய்வின் போது போலி மருத்துவரை கண்டுபிடித்து மாவட்ட ஆட்சித் தலைவர் ரோகினி காவல் துறையினரிடம் ஒப்படைத்தார்.


Advertisement

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி மற்றும் சங்ககிரி பகுதிகளில் டெங்கு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ரோகினி இன்று ஆய்வு செய்தார். இந்த திடீர் ஆய்வின்போது மகுடஞ்சாவடி பேருந்து நிறுத்தத்தில் மருந்தகம் என்ற பெயரில் நோயாளிகளுக்கு ஆங்கில வழி மருத்துவம் பார்த்து வந்த பாஸ்கர் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டார். அதில் மருத்துவர் என்ற பெயரில் பாஸ்கர் சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. 

இதனையடுத்து உடனடியாக பாஸ்கரை காவல் துறையினரிடம் ஒப்படைத்த ஆட்சியர் ரோஹினி, அங்கிருந்த ஊசி மற்றும் மருந்து பொருட்களை பறிமுதல் செய்தார். தொடர்ந்து மருந்தகம் மற்றும் அதனுடன் சிகிச்சை அளித்து வந்த இடத்தை தானே பூட்டி சீல் வைத்தார். மேலும் மகுடஞ்சாவடி பகுதியில் டெங்கு ஒழிப்பு பணிகளை சரிவர செய்யாமல் மெத்தனம் காட்டி வந்த ஊராட்சி செயலாளர் செந்தில் என்பவரை பணியிட மாற்றம் செய்தும் உத்தரவிட்டார்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close