Published : 07,Mar 2022 12:48 PM

ரோல்ஸ் ராயஸ் முதல் செவர்லெட் வரை - சென்னையில் பாரம்பரிய கார் கண்காட்சி

சென்னையில் பழமையான பாரம்பரிய கார்களின் கண்காட்சி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஜீப்பை எங்கு வேண்டுமென்றாலும் எடுத்துச் செல்லலாம். நடுவழியில் பழுதாகி நிற்காது. 1944ல் எப்படி இருந்ததோ, அதே திறனுடன் தற்போதும் இருக்கிறது. தற்போதைய வாகனங்கள் கூட இந்த ஜீப்புக்கு இணையாக இல்லை. பழசுக்கு என்றுமே மவுசு குறையாது என்பதை பறைசாற்றும் வகையில் பாரம்பரிய கார்கள் கண்காட்சி, சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் நடைபெற்றது.

image

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர்கள் சங்கம், மெட்ராஸ் ஹெரிடேஜ் மோட்டாரிங் கிளப் சார்பில் இந்த கண்காட்சி நடைபெற்றது. 1927 ஆம் ஆண்டு முதல் 1966 வரை சாலைகளில் பவனி வந்த ரோல்ஸ் ராயஸ், ஜாக்குவார், மெர்சடஸ் பென்ஸ், எம்.ஜி., செவர்லெட் உள்ளிட்ட 30 க்கும் மேற்பட்ட பழைய மாடல் கார்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

பழைய புகைப்படங்களிலும் பழைய திரைப்படங்களிலும் பார்த்து மகிழ்ந்த கார்கள், ஒரே இடத்தில் அணிவகுத்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது கார் பிரியர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்களுக்கும் விருந்தாக அமைந்தது. அணிவகுத்து நின்ற கார்களின் முன் நின்று, பார்வையாளர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்