Published : 01,Sep 2017 12:12 PM

உலகக்கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று: பராகுவே, பிரேசில் அணிகள் வெற்றி

World-Cup-football-qualifying-round--Paraguay-and-Brazil-teams-win

உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில் பராகுவே அணி ஆறாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளது.

சான்டியாகோ நகரில் நடந்த உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் சிலி அணியை எதிர்த்து பராகுவே அணி விளையாடியது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய பராகுவே அணி, மூன்றுக்கு - பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வெற்றியை வசமாக்கியது. 

மற்றொரு போட்டியில், உலகக்கோப்பை தொடருக்கான தகுதியை ஏற்கனவே உறுதி செய்துவிட்ட பிரேசில் அணி, ஈக்வடார் அணியை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தென்அமெரிக்க அணிகளுக்கான பிரிவில், முதல் 4 இடங்களைப் பிடிக்கும் அணிகள், ரஷ்யாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக்கோப்பை போட்டிக்கு தகுதி பெறும்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்