Published : 01,Sep 2017 05:51 AM

10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் - பொதுமக்கள் புகார்

Banks-refusing-to-buy-10-rupees-coins---public-complaint

விருதுநகர் ஐ.டி.பி.ஐ வங்கியில் வங்கி ஊழியர்கள் 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கடந்த சில மாதங்களாக பல்வேறு வணிக நிறுவனங்கள், பேருந்துகள், கடைகளில் 10 ரூபாய் நாணயங்கள் வாங்க மறுக்கும் நிலை தொடர்ந்து வரும் நிலையில் மத்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயங்களை வாங்க அனைத்து வங்கிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில் விருதுநகரில் செயல்படும் ஐ.டி.பி.ஐ வங்கியில் 10 ரூபாய் நாணயங்களை வங்கி ஊழியர்கள் வாங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த வங்கியில் கணக்கு வைத்துள்ள ஆமத்தூரை சேர்ந்த பாலா என்பவர் தனது வங்கி கணக்கில் வரவு வைப்பதற்காக 10 ரூபாய் நாணயங்களை வங்கியில் செலுத்திய போது நாணயங்களை வாங்க மறுத்துள்ளனர்.

ஏற்கனவே அதிகளவில் தங்களிடம் 10 ரூபாய் நாணயங்கள் இருப்பதால் வாங்க முடியாது என அலட்சியத்தோடு வங்கி ஊழியர்கள் பதிலளித்து நாணயத்தை வாங்க மறுத்ததால் வங்கயில் பணத்தை செலுத்த முடியாமல் திருப்பி கொண்டு சென்றுவிட்டார். மத்திய ரிசர்வ் வங்கி 10 ரூபாய் நாணயம் செல்லும் எனவும் தடையின்றி வாங்க வங்கிகளுக்கு அறிவுறுத்தி வந்தாலும் சில வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பது பொதுமக்களிடையே கடும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்