[X] Close

குடியரசுத் தலைவருடன் எதிர்க்கட்சி எம்பிக்கள் சந்திப்பு

MP-meeting-with-President

தமிழகத்தில் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை ‌நிரூபிக்க உத்தரவிடக்கோரி டெல்லியில் குடியரசுத் தலைவரிடம் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளன.

திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி ஆகியோர் குடியரசு தலைவரை சந்தித்து தமிழகத்தில் நிலவும் அரசியல் பிரச்னைக்கு தீர்வு காணும்படி வலியுறுத்தினர். அப்போது தமிழக எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அவர்கள் வழங்கினர்.

குறிப்பாக தமிழக ஆளுநரின் செயல்பாட்டில் சந்தேகம் இருப்பதால் சட்டப்பேரவையை கூட்டும் விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close