Published : 19,Feb 2022 10:33 PM
மதுரை: ஹிஜாப் உடை சர்ச்சையில் கைது செய்யப்பட்ட பாஜக முகவருக்கு 14 நாள் சிறை

ஹிஜாப் உடை சர்ச்சையில் காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக முகவர் கிரிநந்தனை , மார்ச் 4 ஆம் தேதி வரை சிறையில் அடைக்க மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எட்டாவது வார்டு வாக்கு பதிவு மையத்தில் ஹிஜாப் உடை அணிந்து வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப் உடையை அகற்ற கூறிய விவகாரத்தில் மேலூர் காவல் துறையால் கைது செய்யப்பட்ட பாஜக முகவரி கிரிநந்தனை மேலூர் காவல் துறையினர் , மேலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஜெயந்தி முன்னிலையில் விசாரணைக்காக ஆஜர்படுத்தினர்.
அவரிடம் நீதிமன்ற நடுவர் ஜெயந்தி நடந்த விவரங்களை விசாரித்தார், அதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட பாஜக முகவர் கிரிநந்தனை வருகின்ற நான்காம் தேதி வரை நீதிமன்ற காவலில் மேலூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.
அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் அவரை மேலூர் சிறையில் அடைத்தனர்.