[X] Close

பிரேசில்: நிலச்சரிவில் சிக்கி 58 பேர் உயிரிழப்பு- கோரத்தை காட்டும் ட்ரோன் காட்சி

உலகம்

The-death-toll-from-a-landslide-in-Brazil-Petropolis-has-risen-to-58

பிரேசில் நாட்டின் பெட்ரோபோலிஸ் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

ரியோ டி ஜெனிரோவின் மலையோரப் பகுதியான பெட்ரோபோலிஸில் பெய்த கனமழையின்போது நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் சுமார் 80 வீடுகள் முற்றிலும் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களில் 58 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடரும் நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

image

வீடுகளை இழந்த மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நிலச்சரிவின் கோரத்தைக் காட்டும் ட்ரோன் காட்சிகளை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது.


Advertisement



இதையும் படிக்க: 3-வது மாடியில் அறைக்குள் சிக்கித் தவித்த சிறுமி - பத்திரமாக மீட்ட தீயணைப்புத்துறை

Advertisement:

Advertisement

Advertisement
[X] Close