Published : 11,Feb 2022 11:45 AM

வீடு வீடாக பிரசாரமா அல்லது அணிவகுப்பா? - காங்கிரஸ் மீது பாய்ந்த வழக்கு

UP-polls-2022-Congress--door-to-door-campaign-looked-like-a-roadshow--say-police-case-registered

வீடு வீடாக பிரச்சாரம் என்ற பெயரில் அணிவகுப்பு நடத்தப்பட்டதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

நாட்டின் முக்கிய தேர்தலாக கருதப்படும் உத்தரப் பிரதேச மாநில சட்டசபைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ் கட்சியின் கோட்டையாக இருந்தது உத்தரப் பிரதேச மாநிலம். கடந்த 1989- ஆம் ஆண்டு சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் உத்தரப் பிரதேசத்தில் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு மீண்டும் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வரவில்லை. கடந்த சட்டமன்றத் தேர்தலில் 114 தொகுதிகளில் போட்டியிட்டு 7 இடங்களில் மட்டுமே காங்கிரஸ் கட்சி வென்றது. இந்த முறை காங்கிரஸ் கட்சி புதிய நம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநில தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வீடு வீடாக சென்று பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இளைஞர்கள், வணிகர்கள், பெண்களுடனும் உரையாடும் பிரியங்கா காந்தி, காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை குறித்து பொதுமக்களிடம் விவரித்து காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து வருகிறார்.

image

கொரோனா காரணமாக, பொதுக்கூட்டம், வாகன அணிவகுப்பு போன்றவற்றுக்கு தடை விதிக்கப்பட்டதால், அரசியல் தலைவர்கள் காணொலி மூலமாகவே பிரசாரம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் மொராதாபாத்தை சேர்ந்த காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் குரேஷி, கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவுடன் நேற்று நகரில் வீடு வீடாக பிரச்சாரம் செய்தார். ஆனால் வீடு வீடாக பிரச்சாரம் என்ற பெயரில் அணிவகுப்பு நடத்தப்பட்டதாகக் கூறி, காங்கிரஸ் கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரப்பிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா உள்ளிட்டோரும் வீடு வீடாக கூட்டமாக சென்று வாக்கு சேகரித்தனர். ஆனால் பாஜகவினர் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என்று காங்கிரஸ் வேட்பாளர் ரிஸ்வான் குரேஷி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதையும் படிக்க: "நீங்கள் இதைச் செய்தால்தான் வரிச் சலுகை" பிரபல நிறுவனத்திடம் மத்திய அரசு திட்டவட்டம்


சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்