Published : 09,Feb 2022 06:57 PM

இந்தியாவில் அபாச்சி RTR 160 4V பைக்கின் விலையை உயர்த்திய டிவிஎஸ் நிறுவனம்

TVS-Company-increased-the-price-of-Apache-RTR-160-4V-in-India-due-to-Rise-in-Input-cost

அதிகரித்து வரும் உற்பத்தி செலவினால் இந்தியாவில் ஆட்டோமொபைல் உற்பத்தியில் ஈடுபட்டு வரும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்பில் உருவாக்கப்படும் வாகனங்களின் விலையை உயர்த்தி வருகின்றன. தற்போது அந்த நிறுவனங்களில் ஒன்றாக இணைந்துள்ளது டிவிஎஸ். 

image

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் தனது பல்வேறு வாகனங்களின் விலையை உயர்த்தி உள்ளதாக தகவல். அதில் அபாச்சி வாகனத்தின் விலையையும் உயர்த்தியுள்ளது. RTR 160 4V பைக்கின் விலை தற்போது 2000 ரூபாய் அதிகரித்துள்ளது. டிரம் பிரேக், டிஸ்க் பிரேக், டிஸ்க் பிரேக் வித் ப்ளூடூத் மற்றும் ஸ்பெஷல் எடிஷன் என நான்கு வேரியண்டுக்கான விலையையும் டிவிஎஸ் உயர்த்தியுள்ளது. 

159.7 சிசி, சிங்கிள் சிலிண்டர் ஃபோர் வால்வ், ஆயில்-கூல்ட் இன்ஜின், 5 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஷோவா டெலஸ்கோபிக் ஃபோர்க், சிங்கிள் சேனல் ABS, மூன்று விதமான ரைடிங் மோட் என இந்த வாகனம் சிறப்பம்சத்தில் அசத்துகிறது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்