Published : 06,Feb 2022 08:25 PM

மதுரை மாநகராட்சியில் அமைச்சரின் உறவினருக்கு மேயர் வாய்ப்பு?

மதுரை மாநகராட்சியில் அமைச்சர்களின் உறவினர்கள் அல்லது முக்கிய நிர்வாகிகளின் குடும்பங்களைச் சேர்ந்த ஒருவரே மேயராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக திமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

100 வார்டுகளைக் கொண்ட மதுரை மாநகராட்சியில் திமுக 78 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 22 இடங்களிலும் போட்டியிடுகின்றன. மதுரை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், திமுக தரப்பில் அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர் ஒருவரின் உறவினர்கள், ஆதரவாளர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்களின் உறவினர்களில் ஒருவருக்கே மேயர் வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

image

குறிப்பாக, அமைச்சர் தங்கம் தென்னரசின் நெருங்கிய உறவினரான திமுக பகுதி செயலாளர் பொம்மதேவன் என்பவரின் மகள் ரோகிணி பொம்மதேவனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. முன்னாள் அமைச்சரும் திமுக வடக்கு மாவட்ட செயலாளருமான பொன் முத்துராமலிங்கத்தின் மருமகள் விஜய மௌசிமி, அமைச்சர் மூர்த்தியின் தீவிர ஆதரவாளரும், திருப்பாலை பகுதி செயலாளருமான சசிகுமார் என்பவரின் மனைவி வாசுகி ஆகியோரில் ஒருவருக்கு மேயர் பதவி கிடைக்கலாம் என்று பேசப்படுகிறது.

மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினரும் மாநகர் வடக்கு மாவட்ட செயலாளருமான தளபதியின் உறவினர் இந்திரா காந்தி, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் ஆதரவாளரான பாமா முருகன், மிசா பாண்டியனின் மனைவி பாண்டிச்செல்வி ஆகியோரின் பெயர்களும் திமுக வட்டாரத்தில் உலா வருகின்றது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்