பாடகி லதா மங்கேஷ்கர் மறைந்ததையடுத்து உதயநிதியின் ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தின் டீசர் இன்று வெளியாகாது என்றும், ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் படக்குழு அறிவித்துள்ளது.
அனுபவ் சின்ஹா இயக்கத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த 'ஆர்டிகிள் 15' தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வருகிறார். நாயகியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார்.
'பிக்பாஸ்' ஆரி, சுரேஷ் சக்ரவர்த்தி, தெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரின் மகள் ஷிவானி ராஜசேகரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார்.
சமீபத்தில், இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் ஈர்த்த நிலையில், இன்று மாலை 6.30 மணிக்கு டீசர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பாடகி லதா மங்கேஷ்கர் மறைவையடுத்து, டீசர் ரிலீசாகாது என படக்குழு அறிவித்துள்ளது. ''நெஞ்சுக்கு நீதி படக்குழு தேசத்துடன் இணைந்து இந்தியாவின் குரலான லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கிறது. எனவே டீசர் தேதி ஒத்திவைக்கப்படுகிறது''என நெஞ்சுக்கு நீதி படக்குழு அறிவித்துள்ளது.
Loading More post
”எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்கியதே பா.ஜ.க.தான்” - நயினார் நாகேந்திரன்
என்ன 'குதிரை பேரமா..?'.. தவறுதலாக கூறிய நிர்மலா சீதாராமன்.. கலாய்க்கும் நெட்டிசன்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
தொழில் சீர்திருத்தங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் - மத்திய அரசு அறிக்கை!
வெற்றிகரமாக சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது பிஎஸ்எல்வி சி-53! விரிவான தகவல்
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide
செல்லப்பிராணிகளை வளர்ப்பவரா நீங்கள்? - உங்களுக்கு இந்த வியாதிகள் பரவும் வாய்ப்புகள் அதிகம்