Published : 05,Feb 2022 08:47 PM

தமிழகத்தில் 8000க்கும் கீழ் குறைந்த தினசரி கொரோனா பாதிப்பு

Daily-corona-positive-cases-reduced-under-8000-in-Tamilnadu

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 9,916இல் இருந்து 7,524ஆக குறைந்துள்ளதாக மருத்துவத்துறை தெரிவித்திருக்கிறது.

1,26,701 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 7,524ஆக உள்ளது. சென்னையில் ஏற்கெனவே 1,475 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்த நிலையில் பாதிப்பு 1,223ஆக குறைந்துள்ளது. கொரோனாவால் மேலும் 37 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37,733ஆக உயர்ந்துள்ளது. அரசு மருத்துவமனைகளில் 14 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 23 பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,55,239இல் இருந்து 1,38,878ஆக குறைந்துள்ளது. கொரோனாவிலிருந்து மேலும் 23,938பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 32,28,151 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

image

கோவையில் 1,224ஆக இருந்த ஒருநாள் கொரோனா பாதிப்பு தற்போது 1,020ஆக குறைந்துள்ளது. செங்கல்பட்டில் 983ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 691ஆக குறைந்துள்ளது. அதேபோல் திருப்பூரில் 857ஆக இருந்த ஒருநாள் பாதிப்பு தற்போது 609ஆக குறைந்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்