Published : 01,Feb 2022 01:08 PM

மத்திய பட்ஜெட்: பயிர்களை மதிப்பீடு ட்ரோன்கள் பயன்படுத்த திட்டம்

Union-Budget-Plan-to-use-drones-for-crop-assessment-says-Finance-Minister-Nirmala-Sitharaman--

2022 - 23 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அதில் இந்திய வேளாண் துறையை நவீனப்படுத்தும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் அடங்கிய அறிவிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார். அதில் விவசாய பயிர்களை மதிப்பீடு செய்ய ட்ரோன்கள் பயன்படுத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

அனைத்து நில பதிவுகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். விவசாயம் மற்றும் கிராமப்புற ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு நபார்டு வங்கி மூலம் நிதியுதவி அளிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  விவசாயிகளுக்கு டிஜிட்டல் மற்றும் ஹைடெக் சேவைகளை வழங்க PPP Mode முறையில் திட்டம் அறிமுகப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

மேலும் உள்நாட்டில் எண்ணெய் வித்து உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் முன்னோடி திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் எண்ணெய் வித்துகளுக்காக பிற நாடுகளை சார்ந்திருக்கும் இறக்குமதியை குறைக்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்