[X] Close

எம்.எல்.ஏக்கள் மற்றும் எம்.பிக்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை

Chief-Minister-meeting-with-MLAs-and-MPs

நாளுக்கு நாள் கட்சிக்குள் குழப்பம் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள், எம்பிக்கள் கூட்டம் முதலமைச்சர் தலைமையில் இன்று நடைபெறுகிறது. 

இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது குறித்து முதல்வர் பழனிசாமி முக்கிய ஆலோசனை நடத்துவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அதிமுக பொதுக்குழுவை செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் கூட்டுவதற்கான அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. பொதுக்குழுவைக் கூட்ட பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உண்டு எனக் கூறி வரும் டிடிவி தினகரன் அணியினரும் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக செயற்குழுவில் 250 உறுப்பினர்களும், பொதுக்குழுவில் 2 ஆயிரத்து 780 உறுப்பினர்களும் உள்ளனர். ஐந்தில் ஒரு பங்கு உறுப்பினர்கள் கோரினால் பொதுக்குழு கூட்டப்படவேண்டும் என்பது அதிமுக கட்சி விதியாகும்.

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close