“கலைமகள் தனது மகளை சேர்க்க பள்ளி ஏகினாள்
வீணை விற்று கட்டணம் கட்டி வீடு திரும்பினாள்
சரியா? சரியா? ஒரு கல்வி மனித உரிமை என்று காணலையா!
முறையா? ஒரு ஏழை வீட்டில் கல்வி என்ன பொய்யா!” என ரெட் படத்தில் வரும் பாடலில் கவிஞர் வைரமுத்து தனது வரிகள் மூலம் கேட்டிருப்பார். அந்த வகையில் வருங்கால இந்தியாவிற்கு ஊக்கமளிக்கும் விதமாக உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான விவோ நிறுவனம் ‘Vivo For Education’ என்ற திட்டத்தின் மூலம் இந்திய மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குகிறது. இதனை விவோ இந்தியா தெரிவித்துள்ளது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உள்ள சமூக பொறுப்புணர்வின் கீழ் இந்த திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. அதன் மூலம் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 100 ஸ்மார்ட்போன்கள் மற்றும் 1.5 லட்ச ரூபாய் மதிப்பிலான ஊக்கத்தொகையை பொருளாதார ரீதியாக பின்தங்கிய 100 மாணவர்களுக்கு வழங்குகிறது விவோ. நிச்சயம் இன்றைய இக்கட்டான சூழலில் மாணவர்களுக்கு இது உதவும் எனவும் விவோ தெரிவித்துள்ளது. இதற்காக Protean உடன் இணைந்துள்ளது விவோ.
இந்த திட்டத்தின் கீழ் தற்போது 11-ஆம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு விவோ ஸ்மார்ட்போன் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு சுமார் 65 மாணவர்களுக்கு 8 லட்ச ரூபாய் ஊக்கத்தொகை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது விவோ.
Loading More post
'கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்' - ஐ.நா அமெரிக்க தூதர் நம்பிக்கை
பேரறிவாளன் விடுதலை மூலம் மாநில உரிமையும் நிலைநாட்டப்பட்டுள்ளது - முதல்வர் மு.க.ஸ்டாலின்
பேரறிவாளன் விடுதலை - இதுவரை வழக்கு கடந்து வந்த பாதை
விடுதலை ஆனார் பேரறிவாளன்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு
கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: ஏ.ஆர்.ரஹ்மான், கமலஹாசனுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு
அத்தனையும் கையிலிருந்தும் சொதப்பும் பஞ்சாப் கிங்ஸ் - காரணம் என்ன?
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்