[X] Close

இஸ்லாமிய அமைப்பின் தன்னார்வ‌லர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு

PM-Modi-congratulates-volunteers

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோயில்கள், மசூதிகளை தூய்மைப்படுத்திய இஸ்லாமிய அமைப்பின் தன்னார்வ‌லர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாதம்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் ‘மன் கி பாத்’ என்ற நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இன்று வானொலியில் பேசிய பிரதமர் மோடி, 22 கோயில்கள், 2 மசூதிகளை ஜமீயத் உலேமா இ இந்த் என்ற அமைப்பினர் தூய்மைப்படுத்திய நிகழ்வு, நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு சிறந்த உதாரணமாகும் என குறிப்பிட்டார். இதுபோன்ற ஒற்றுமையால் நாட்டின் வளர்ச்சியை உறுதிப்படுத்த முடியும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.

வன்முறையை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என்று தெரிவித்த பிரதமர், சட்டத்தை யாரும் கையில் எடுத்துக் கொள்ள அனுமதிக்க முடியாது எனவும் திட்டவட்டமாக தெரிவித்தார்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close