Published : 14,Jan 2022 08:24 PM

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 23,459 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

Today-23459-persons-tested-positive-for-COVID19-in-Tamil-Nadu-State-of-India--

கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு மாநிலத்தில் 23,459 பேருக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று மொத்தம் 1,50,037 பேரிடம் மேற்கொண்ட RT-PCR சோதனை மேற்கொண்டதில் இது தெரியவந்துள்ளது. சிகிச்சை பலன் அளிக்காமல் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.  

image

1,18,017 பேர் தற்போது கொரோனா தொற்றுடன் சிகிச்சையில் உள்ளனர். 666 பேர் ஐசியூவில் சிகிச்சையில் பெற்று வருகின்றனர். நேற்று 20,911 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருந்தது. 

தலைநகர் சென்னையில் மட்டும் 8963 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு,  ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில் தொற்று உறுதியாகும் சதவிகிதம் 22% கடந்துள்ளது. தமிழ்நாட்டில் இந்த எண்ணிக்கை 13.4% என அதிகரித்துள்ளது. 

image

பாதிக்கப்பட்ட 23459 பேரில் 21 பேர் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாடு வந்தவர்கள். 

செங்கல்பட்டு 2504 பேர், கோவை 1564 பேர், திருவள்ளூர் 1393 பேர், காஞ்சிபுரம் 802 பேர், மதுரை 631 பேர், குமரி 572 பேர், சேலம் 499, திருச்சி 477, ராணிப்பேட்டை 461, தஞ்சை 410 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்