Published : 13,Jan 2022 09:41 PM

இன்ஸ்டாகிராமில் 300 மில்லியன் ஃபாலோயர்களை பெற்ற முதல் பெண்: அமெரிக்க நடிகை சாதனை

Kylie-Jenner-Creates-record-by-reaching-the-First-woman-to-mark-300-million-followers-on-Instagram--

அமெரிக்க தொலைக்காட்சி நடிகையும், மாடலுமான க்ய்லை ஜெனர் (Kylie Jenner) இன்ஸ்டாகிராம் தளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற பெண் என்ற சாதனையை படைத்துள்ளார். மொத்தம் 300 மில்லியன் ஃபாலோயர்கள் அவரை பின் தொடர்ந்து வருகின்றனர். இந்த மைல்கல்லின் மூலம் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை பெற்ற பெண்ணாகி உள்ளார் அவர். 

image

பாப் இசை உலகின் நட்சத்திர பாடகி Ariana Grande-வை பின்னுக்கு தள்ளியுள்ளார் 24 வயதான ஜெனர். இன்ஸ்டாவில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபராக கால்பந்தாட்ட உலகின் நட்சத்திர வீரர் ரொனால்டோ உள்ளார். அவரை 388 மில்லியன் பேர் பின் தொடர்ந்து வருகின்றனர். 

தற்போது தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்துள்ள க்ய்லை ஜெனர் கடந்த சில மாதங்களாக சமூக வலைதள பக்கங்களில் இருந்து விலகியிருந்தார். ஜனவரி பிறந்து 13 நாட்கள் கடந்துள்ள சூழலில் இரண்டு பதிவுகளை மட்டும்தான் இன்ஸ்டாவில் அவர் பகிர்ந்துள்ளார். 

image

கடந்த 2018-இல் தன் முதல் குழந்தையின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்தார் க்ய்லை ஜெனர். அந்த புகைப்படம் 18 மில்லியனுக்கும் அதிகமானோரால் லைக் செய்யப்பட்டது. அதோடு இன்ஸ்டாவில் அதிக லைக் செய்யப்பட்ட புகைப்படம் என்ற சாதனையையும் அது படைத்தது. இருப்பினும் ஒரு முட்டையின் புகைப்படம் அந்த சாதனையை தகர்த்தது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்