Published : 27,Aug 2017 11:55 AM

திமுக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க பாஜக முயற்சி: தொல்.திருமாவளவன்

BJP-Stopped-dmk-in-Tamilnadu--Thol-Thirumavalavan

அதிமுகவை பலவீனப்படுத்தவும், திமுகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுக்கவும் பாரதிய ஜனதா கட்சி முயற்சிப்பதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “ஆளுங்கட்சியை சேர்ந்த முன்னணி பொறுப்பாளர்களை பாஜக-வில் சேர்ப்பதற்கான நடவடிக்கையில் அக்கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதிமுக-வை பலவீனப்படுத்தவும், திமுக-வை ஆட்சிக்கு வர விடாமல் தடுப்பதும் தான் பாஜக-வின் தற்போதைய செயல்திட்டமாக உள்ளது. தமிழகத்தில் மதவாத சக்திகளைக் காலூன்றவிடாமல் தடுக்க ஜனநாயக அமைப்புகள் ஒன்றிணைய வேண்டும்” என்று தெரிவித்தார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்