Published : 12,Jan 2022 10:40 AM
இந்தியாவில் 2 லட்சத்தை நெருங்கும் தினசரி கொரோனா பாதிப்பு

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை நெருங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் மேலும் 1,94,720 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 60,405 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் 442 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 9,55,319 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று 1,68,063 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று இந்த எண்ணிக்கை மேலும் 26,657 அதிகரித்து 1,94,720 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் தற்போதுவரை 4,868 பேர் ஓமைக்ரான் வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
“முகக்கசவம் அணிவோம்; தனிமனித இடைவெளியை கடைபிடிப்போம்; கொரோனாவை ஒழிப்போம்”