பிரபல ரவுடி படப்பை குணா காவல்துறையினரால் என்கவுன்ட்டர் செய்யப்படலாம் என அச்சம் தெரிவித்து அவரது மனைவி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் படப்பை குணா என்கிற குணசேகரன் மீது கொலை உள்ளிட்ட 42 வழக்குகள் உள்ளன. தலைமறைவாகியுள்ள குணாவை கைது செய்ய காவல்துறை நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், அவரது மனைவி எல்லம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தனது கணவர் காவல் அதிகாரியால் என்கவுன்ட்டர் செய்யப்படலாம் என அச்சம் எழுந்துள்ளதாகக் கூறிய அவர், படப்பை குணாவை என்கவுன்ட்டர் செய்யக்கூடாது என காவல்துறைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தார்.
குணாவை என்கவுன்ட்டர் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்றும், சரணடையும் பட்சத்தில் விதிகளுக்கு உட்பட்டு நடத்தப்படுவார் என காவல்துறை தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து எல்லம்மாளின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Loading More post
சென்னையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்க கூட்டம் - அனுமதியின்றி நடத்தியதாக அனைவரும் கைது
குரூப் 2 தேர்வு அறைக்கு செல்போன் கொண்டு வந்த நபர்.. வெளியேற்றிய போலீஸ்!
சர்வதேச ஆல்பைன் ஸ்கேட்டிங் போட்டிக்கு தகுதிபெற்ற கோவை மாணவர்கள்.. யார் அவர்கள்?
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு - மத்திய அமைச்சர் அதிரடி அறிவிப்பு.. எவ்வளவு தெரியுமா?
ஒரு மின்னல் வேக ஸ்டம்பிங் கூட இல்லை.. நடப்பு சீசனில் தோனியின் பெர்ஃபாமன்ஸ் எப்படி?
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்
அரசு காப்பீட்டு திட்டத்தில் 4 ஆண்டுகளில் ரூ.2,368 கோடி பயன்படுத்தவில்லை! அதிர்ச்சி தகவல்
கல்குவாரி விபத்தால் உருக்குலைந்த குடும்பம்.. கைக்குழந்தையுடன் தவிக்கும் இளம்பெண்!