காணாமல்போன பெண்ணை கண்டுபிடித்த காவலரே கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாக வந்த புகாரை அடுத்து போலீஸ்காரரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.
தென்காசியை சேர்ந்த தொழிலாளி ஒருவர் தனது குடும்பத்துடன் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலைசெய்து வருகிறார். இவருடைய மனைவியும் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலைசெய்து வந்த நிலையில், கடந்த சில தினங்கள் முன்பு வேலைக்கு சென்ற அந்த பெண் திரும்பி வராததால் அவரது கணவர் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், அதே நிறுவனத்தில் பணிபுரிந்த இளைஞருடன் ஏற்பட்ட உறவால் அவருடன் அந்த பெண் ஓடிவிட்டது தெரியவந்தது. இது குறித்து விசாரித்து வந்த குன்னத்தூர் போலீஸ் ஏட்டு முத்துப்பாண்டி அந்த பெண்ணின் செல்போனை தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அந்த பெண் இருக்கும் இடம் தெரியவந்தது.
இதையடுத்து முத்துப்பாண்டி அந்த பெண் இருக்கும் இடத்திற்கு சென்று அந்த பெண்ணை மீட்டு கணவருடன் ஒப்படைக்க அழைத்து வந்தார். ஆனால், அந்த பெண்ணை கணவரிடம் ஒப்படைக்காமல், திருப்பூருக்கு அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்யததாக அந்த பெண் போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசாங் சாய் விசாரணை செய்து, போலீஸ் ஏட்டு முத்துப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Loading More post
”என் தந்தையின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் என் மீது ரெய்டு” - கார்த்தி சிதம்பரம்
'ஆத்திகர், நாத்திகர்கள் ஒரு சேர உருவாக்கியதுதான் திராவிட மாடல்' - அமைச்சர் சேகர் பாபு
பெர்முடா முக்கோணத்தில் கப்பல் காணாமல் போனால் பணம் ரீஃபண்ட்! அறிவிப்பும் கேள்விகளும்!
கோப்பையை வெல்லப் போவது யார்? - ஐபிஎல் ஃபைனலை காண மோடி, அமித் ஷா நேரில் வருகை?
'யாருக்கு கவலையாக இருந்தாலும்’ - பலியான 4 உயிர்களும், ஐடி ஊழியரின் தற்கொலை கடிதமும்!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி