இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிறந்ததினத்தையொட்டி, பிரபல தேடுபொறியான கூகுள் நிறுவனம், சிறப்பு கவன ஈர்ப்புத் சித்திர வீடியோவை வெளியிட்டு கௌரவித்துள்ளது.
ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங், 1942-ம் ஆண்டு, ஜனவரி 8-ம் தேதி, இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்ஃபோர்டில் பிறந்தார். இயற்பியலாரான இவர், அண்டவெளியை பற்றி தெரிந்துகொள்வதில் ஆர்வம் கொண்டு ஆராய்ச்சிகள் மேற்கொண்டதால், இளம் வயதிலேயே ‘ஐன்ஸ்டீன்’ என்ற பட்டப்பெயரால் அழைக்கப்பட்டார். தனது 21 வயதில் அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் என்னும் குணப்படுத்த முடியாத நரம்பு நோயினால், கை, கால் முதலிய உடலியக்கங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, பேச்சற்ற நிலையிலும், தொழில்நுட்ப உதவியுடன் தன்னுடைய பணிகளைச் செய்தார்.
ஸ்டீபன் ஹாக்கிங், ஆக்ஸ்போர்டில் இளங்கலையில் இயற்பியல் பட்டமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் ஆராய்ச்சி (Ph.D) பட்டமும் பெற்றவர். தொடர்ந்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திலேயே கணிதவியலில் லூக்காசியன் பேராசிரியாராக 1979 முதல் சுமார் 30 ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் தனது 67-வது வயதில், 2009-ல் பணி மூப்பு பெற்றார். ஸ்டீபக் ஹாக்கிங் அண்டவெளியின் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுப்பிடிப்புகளை வெளியிட்டவர். குறிப்பாக அண்டவியல், குவாண்டம் ஈர்ப்பு, கருங்குழி வெப்ப இயக்கவியல் குறித்த அவரது ஆய்வுக்கட்டுரைகள் அறிவியலுக்கு முக்கிய பங்களிப்பு ஆற்றியலை என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவியல் துறையில் இயற்பியலில் அளப்பரிய சாதனைகளை படைத்த ஸ்டீபன் ஹாக்கிங் 2018 மார்ச் 14-ம் தேதி உயிரிழந்தார். இந்நிலையில் ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்த தினமான இன்று, 80-வது பிறந்தநாளையொட்டி, அவரது உன்னதமான உத்வேக கருத்துகளுடன், கவனத்தை ஈர்க்கும் வகையில் சிறப்பான சித்திர வீடியோவை கூகுள் நிறுவனம், கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது.
Loading More post
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
லடாக்கில் வாகன விபத்து: 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
சொத்துக்குவிப்பு வழக்கு: ஹரியானா முன்னாள் முதல்வர் ஓம்பிரகாஷ் சவுதாலாவுக்கு சிறை தண்டனை
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!