Published : 26,Aug 2017 12:36 PM

4 நாட்களாக இயங்காத இணையதளம்: நடவடிக்கை எடுக்க ஜி.கே.வாசன் வலியுறுத்தல்

G-K-Vasan-request-to-custom-department

ஏற்றுமதி இறக்குமதி பரிவர்த்தனைகள் தங்கு தடையின்றி செயல்பட கப்பல் மற்றும் சுங்கத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏற்றுமதி, இறக்குமதி பரிவர்த்தனைக்கான இணையதளம் 4 நாட்களாக இயங்காததால் துறைமுகங்களில் சரக்குகள் தேக்கம்‌ அடைந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையால் சரக்குகளை கையாளும் நிறுவனங்களும், இத்தொழிலை நம்பியுள்ள தொழிலாளர்களும் வருவாய் இழந்து தவிப்பதாக குற்றம்சாட்டியுள்ள ஜி.கே.வாசன், இணையதளம் பயன்பாட்டுக்கு வரும் வரை ஏற்றுமதி, இறக்குமதி ஆகும் சரக்குகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்